நீங்க அடிச்சது எங்க ஆள இல்ல.., உங்க ஆள..,

360

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் நிலவிவருகின்றனர். இதனால் அங்கு மக்களின் இயல்வு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அபிநந்தனை போலவே, F16 ரக விமானத்தை இயக்கிய பாகிஸ்தான் போர் விமானி ஷாஜஸ் உத் தின் என்பவரும் விமானத்தில் ஏற்பட்ட பழுதின் காரணத்தில் பாராசூட் மூலம் தப்பித்து, பாகிஸ்தான் எல்லைக்குள் இறங்கினார்.

அப்போது அவரை இந்திய விமானி என தவறாக நினைத்துக்கொண்ட அப்பகுதியில் உள்ள கிராம மக்கள், கடுமையாக தாக்கினர். இதில், ஷாஜஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக லண்டன் வாழ் பாகிஸ்தானியரான, குடியுரிமை வழக்கறிஞர் உமர் தெரிவித்துள்ளார்.

இதனை நேரில் பார்த்ததற்கு ஆதாரங்கள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் போர் விமானியை அந்நாட்டு மக்களே அடித்து கொன்ற சம்பவம், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.