ஐக்கிய நாடுகள் சபையில், ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசிய பாக்., பிரதமர்

246

ஐக்கிய நாடுகள் சபையின், 74ஆம் ஆண்டு பொது சபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசுவதற்கு தலா 15 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. பெருமபலான தலைவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது உரையை நிறைவு செய்தனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி 15 நிமிடங்களுக்குள் தனது உரையை நிறைவு செய்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விதிகளை மீறி தொடர்ந்து 50 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அப்போது நரேந்திர மோடியை பிரதமர் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக குடியரசுத் தலைவர் என இம்ரான் கான் குறிப்பிட்டார்.