அபிநந்தனுக்கு அழுத்தம் கொடுத்த பாகிஸ்தான்?

297

பாகிஸ்தான் பிடியில் இருந்த இந்திய விமானப்படை வீரர் தமிழகத்தின் சிங்கம் அபிநந்தனை நல்லெண்ண விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இரவு 9:20 மணியளவில் அபிநந்தனை வாகா எல்லையில் இருந்த இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அபிநந்தன் தாயகம் திரும்பியதை மக்கள் அனைவரும் கோலாகளமாக கொண்டாடினர்.இந்நிலையில், ஒப்படைக்கப்படும் முன்பு அபிநந்தனிடம் பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்ததாகவும், அதில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும் படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்து, இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க, தாமதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த வீடியோவில் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் எடிட் செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுவது மட்டுமே இடம் பெற்றுள்ளன என்றும், அந்த வீடியோவே பாகிஸ்தான் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டாகவும் கூறப்படுகிறது.