‘எதுக்கு பாஸ்..’ – இந்தியாவை கலாய்த்து பல்பு வாங்கிய பாகிஸ்தான் விண்வெளி அமைச்சர்..!

622

சந்திராயன் – 2 விண்கலம் இன்று அதிகாலை 1 மணியிலிருந்து 2 மணிக்குள் நிலவின் தென்துருவப்பகுதியில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனால் இஸ்ரோ விஞ்ஞாணிகளுக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவத் சவுத்ரி, சந்திரயான் 2 இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு கிண்டல் செய்து டுவீட் செய்துள்ளார்.

அதில், “தயவு செய்து தூங்குங்க… நிலவில் இறங்க வேண்டிய பொம்மை, மும்பையில் இறங்கிவிட்டது” என்று கூறி கலாயத்தார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து விண்வெளி வீரர்களுக்கு மோடி ஆறுதல் தெரிவிக்கும் வீடியோவை பதிவிட்ட பவத் சவுத்ரி, “சாட்டிலைட் குறித்து அரசியல்வாதி போல் இல்லாமல், ஏதோ விண்வெளி வீரர் போல் மோடி பேசுகிறார். 900-கோடியை செலவழித்ததற்கு மக்களவையில் அவரிடம் கேள்வி கேட்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது, சாட்டிலைட் என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கை அவர் தவறாக பதிவிட்டிருந்தார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் அவரை மீண்டும் கலாய்த்து தள்ளிவிட்டனர்.