அத்துமீறிய பாகிஸ்தான் – அதிரடி காட்டிய இந்திய ராணுவம்

670

காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து குப்வாரா மற்றும் கெரான் பகுதிகளில் பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்புகள் மீதும், பாகிஸ்தான் ராணுவத்தினர் மீதும் தாக்குல் நடத்தப்பட்டது.

நீலம், கெல் பள்ளதாக்கு பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 160 பயங்கரவாதிகள் எல்லையில் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து எல்லையில் ராணுவம் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.