தங்கத்திற்கு பதில் தக்காளி..! பாகிஸ்தானில் நடைபெற்ற ஆடம்பர திருமணம்..! ஏன் தெரியுமா..?

672

பாகிஸ்தானில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியதால், சாமானிய மக்கள் தக்காளி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இதனை உலகின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையை சுட்டிக்காட்டும் வகையிலும், பாகிஸ்தான் மணப்பெண் ஒருவர், தங்க நகைகள் அணிவதற்கு பதிலாக தக்காளி நகைகளை அணிந்துள்ளார்.

தக்காளியை கோர்த்து செய்யப்பட்ட நகைகளை கழுத்து, காது மற்றும் கைகளில் அணிந்திருந்தார். தலையிலும் நெத்திச்சுட்டியாக தக்காளியை அணிந்திருந்தார்.

தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அந்த பெண்ணின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.