பாகிஸ்தான் மட்டும் ‘பெருநாள்’ கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கு? மெகபூபா முப்தி

771

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசுகையில், “எங்களிடம் அணுகுண்டு உள்ளது என்று பாகிஸ்தான் மிரட்டினால், நாங்கள் தீபாவளி கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறோம்? என ஆவேசமாக பேசினார்”.

இந்நிலையில், காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, ‘பாகிஸ்தான் மட்டும் என்ன (ரம்ஜான் அல்லது பக்ரீத்) பெருநாள் கொண்டாடவா அணுகுண்டு வைத்திருக்கிறது? என பிரதமர் மோடிக்கு இன்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘இந்தியா தீபாவளிக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என்றால், அதேபோல் பாகிஸ்தானும் பெருநாள் (ஈத்) கொண்டாட்டத்துக்காக அணுகுண்டு வைத்திருக்கவில்லை என பொருள்படும்.

பிரதமர் மோடி மிகவும் தாழ்ந்துப்போய் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் பிரசங்கங்களை ஏன் செய்கிறார்? என்பது தெரியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.