நீங்க எங்க சித்தி நாடு டா… பிரியாணிதான் நம் குடும்ப உணவு டா… பாகிஸ்தானில் வைரலாகும் சிவா பட டயலாக்

1180

சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்ப்படம் -1. படத்தின் வசனம் பாகிஸ்தானில் ட்ரெண்டாகி வருகிறது.
புல்வாமா தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் #SayNoToWar என்ற ஹேஷ்டாக்குடன் நடிகர் சிவா நடித்த தமிழ்ப்படத்தின் வசனங்கள் பாகிஸ்தானில் ட்ரெண்டாகி வருகிறது.

இதை ஒரு பாகிஸ்தானி தனது டுவிட்டர் பக்கத்தில் “Pakistanis and Indian are siblings, Biriyani is our Family Food”(பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் உடன்பிறந்த சகோதரர்களை போன்றவர்கள்,பிரியாணி நம் குடும்பத்தின் உணவு) என பதிவிட்டு, சிவா நடித்த தமிழ்ப்படம்-1 பாகத்தின் வசனங்களை பதிவிட்டிருந்தார்.

சிவா அந்த படத்தில் பாகிஸ்தான் காரரிடம் ”இந்தியா உங்க எதிரி நாடு இல்ல” அது உங்க பெரியதாய் நாடு.. பாகிஸ்தான் எங்க சித்தி நாடு.. நாம் அனைவரும் சகோதரர்கள்.. பிரியாணிதான் நம் குடும்ப உணவு” என ஒரு டயலாக் பேச அதற்கு அந்த பாகிஸ்தான் கதாபாத்திரமுடையவர் மனம் மாறி காலில் விழுந்து கண்ணீர் வடிக்கிறார். 

இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தானிலும் போர் வேண்டாம் என மக்கள் விரும்புகின்றனர்.

இந்த நிலையில் சிவா நடித்த படத்தின் வசனங்கள் அடங்கிய இந்திய படத்தின் வீடியோ பாகிஸ்தானில் வைரலாகி வருவது போர் வேண்டாம் என்ற இரு நாட்டினரின் மனநிலையை உணர்த்துவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

tweet pakistani

இந்த வீடியோ பாகிஸ்தானியர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement