நிதி நீரை தடுப்போம் – மோடி பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு | Pakistan

251

ஹரியானாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவுக்குச் சொந்தமான நீர், ஹரியானா விவசாயிகளுக்குச் சொந்தமான நீர் பாகிஸ்தான் பக்கம் பாய்கிறது என்றும் இந்த நீரை தடுத்து நிறுத்துவேன் என்று கூறியிருந்தார்.

இந்த நீரை இதற்கு முன் ஆண்ட அரசுகள் தடுத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் தற்போது பேசியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகள் மீது தங்களுக்கு முழுமையான உரிமை இருக்கிறது என்று கூறினார்.

அந்த நதிநீரை திசை மாற்றவோ அல்லது தடுக்கவோ இந்தியா முயன்றால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும் என்று கூறிய அவர், அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.