பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசார் லேசான தடியடி..!

635

தமிழகம் உட்பட உலகம் முழுவதும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அலங்காநல்லூர்,அவனியாபுரம்,பாலமேடு ஆகிய இடங்களில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்த நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியின் போது, முறையான டோக்கன் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்தனர். அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.