நாசா செல்லும் பள்ளி மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

285

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி அபிநயா வெற்றி பெற்றார்.

இதையடுத்து, அவர் நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளார். இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசு சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாணவி அபிநயாவின் சாதனையை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும் அவருக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

விண்வெளி துறையில் இதுபோன்று பல சாதனைகள் படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of