மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகளின் உரிமை காக்கப்படும்

451

மேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு விவசாயிகளின் உரிமை காக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட வரைவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு விவசாயிகளின் உரிமை காக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கஜா புயல் இழப்பீடு தொகையாக மத்திய அரசு முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும், மேலும் நிவாரணம் கேட்டு பெறப்படும் என கூறினார்.