வேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி!

734

தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராமசாமி, வண்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட போலீசுக்கு அனுமதி உள்ளதா?? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தூத்துக்குடியில் வேன் மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை என்றும் போலீஸ் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.