முதல்வர் வெளிநாட்டு பயணம் – wait and see சொன்ன சீமான்…

232

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற்றதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஏற்கனவே தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு முதலீடு வந்துள்ளது, எத்தனை ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விளக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்க மாநில அரசு சார்பில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், மத்திய அரசு மற்ற நாடுகளுக்கு கடன் வழங்கி வருவது முரணாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.