துருபிடிக்கும் பாம்பன் பாலம்

1255

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் பாலம் தான் பாம்பன்.

இந்தியாவின் முதல் கடல் பாலமான இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்டதாகும். இது இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம்.

பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால், கடல் காற்றினால் துருப்பிடிக்காமல் இருக்க ஆண்டுதோறும் பெயின்ட் அடிக்கப்படுகிறது.

மேலும், உப்புக்காற்றினால் பாலம் துருப்பிடிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பாலத்திற்கு சிறப்பு வேதிப்பொருட்கள் கலந்த அலுமினிய பெயின்ட் ஆண்டுக்கு ஒரு முறை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

ஆனால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பாலத்திற்கு பெயின்ட் அடிக்கும் பணி நடைபெறாததால் பாலம் அதிகளவில் துருப்பிடித்து காணப்படுகிறது.

மேலும் கப்பல் செல்லும்போது திறந்து வழிவிடும் ஷெர்ஜர் தூக்குப்பாலத்தினை அகற்றி புதிய பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

விரைவில் புதிய பாலம் அமைக்கப்படும் என்று செல்கிறார்களே தவிர, அதற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தூக்குப்பாலம் அமைக்கும் பணி இன்று வரை துவங்கப்படாத நிலையில், பாலத்தில் பெயின்ட் அடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாம்பன் ரயில் பாலத்தில் ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்படுவதை தடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement