சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள்..- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு..!

304

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.

இந்நிலையில் பாமக நிறுவனா் ராமதாஸ் ட்விட்டரில் கூறியதாவது: சென்னையில் நாளை இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டவிரோத விளம்பரங்களை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும் என்று கூறி விளம்பரங்களின் இரு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of