பந்தல் சரிந்து 14 பேர் பலி : பிரதமர் இரங்கல்

332

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில் இன்று கதாகாலட்சேபம் நிகழ்ச்சியின்போது பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பார்மர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நீதி விசாரணைக்கு அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ராஜஸ்தான் அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

காயங்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of