கூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..!

1378

ரயில் பயணம் என்றாலே பலருக்கு மிகவும் பிடிக்கும்.. இதமான காற்றில் தடக்…தடக்.. என்ற சப்தத்தின் ஓசையில் ஒருவிதமான மகிழ்ச்சி கலந்த அனுபவத்தை தரும் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.

இதில், தமிழகத்தில் மிகவும் பிரபலமான ரயில் வண்டி என்றால் அது பாண்டியன் எக்ஸ்பிரஸ் தான்… பாண்டியன் எக்ஸ்பிரஸ் இயங்க துவங்கிய தினம் இன்று… அது குறித்து சில தகவல்களை பார்க்கலாம்..

பாண்டியன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் , இந்திய இரயில்வேயின் ஒரு மண்டலமான தெற்கு இரயில்வேயால் மதுரை சந்திப்பு மற்றும் சென்னை எழும்பூர் இடையே திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும் அதிவிரைவு ரயில் வண்டியாகும்.

மதுரையைத் தலைமையிடமாக கொண்ட பாண்டியர்கள் பெயரால் இந்த ரயில் வண்டி பாண்டியன் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் முதலிய நகரங்கள் வழியே 497 கி.மீ. பயணிக்கிறது.

இதன் அதிகபட்ச வேகம் 110 கி.மீ/மணி. இது தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க வண்டிகளுள் ஒன்றாகும். இது ராக்போர்ட் விரைவு ரயில்வண்டியின் பெட்டிகளைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த ரயில் வண்டி மதுரை பணிமனையில் பராமரிக்கப்படுகிறது.

 பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த அதிவிரைவு தொடர்வண்டி இதே நாளில் தான்(அக்டோபர் 01, 1969)  50 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

Advertisement