இந்தோனேசியாவின் சம்பா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: மக்கள் பீதி

247

இந்தோனேசியாவின் சம்பா தீவில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்தோனேசியாவின் சம்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
சம்பா தீவில் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வசித்து வருகின்றனர். இந்நிலநடுக்கம் சம்பா தீவுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்
மையம் கொண்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளி கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.