தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது

971

பெங்களூரு: தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் சற்றுமுன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தமிழகத்தில் இருந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், கேரளாவில் இருந்து நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் மற்றும் ஆந்திராவில் இருந்து முதலமைச்சரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement