முதல்வராக வேண்டும் என பன்னீர்செல்வம் பகல் கனவு காண்கிறார் – தினகரன்

674

முதல்வராக வேண்டும் என பன்னீர்செல்வம் பகல் கனவு காண்பதாகவும், பகல் கனவு என்றும் பலிக்காது எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார், அப்போது, நான் தியாகி அல்ல.

ஆனால் நான் ஓபிஎஸ் போல துரோகியல்ல என தெரிவித்தார். நான் முதல்வராக வேண்டுமென ஆசைப்பட்டிருந்தால் செப்டம்பர் 1 ம் தேதியே முதல்வராகியிருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தினகரன் ஓபிஎஸ் முதல்வராக வேண்டும் என பகல் கனவு கண்பதாகவும், பகல் கனவு என்றும் பலிக்காது என தெரிவித்தார். ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் ஏற்கனவே குக்கர் என்கிற டோக்கனை கொடுத்து விட்டோம் என தெரிவித்தார்.