கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்

215

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி வராததால் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதிப்பகிர்வால், தமிழ்நாடு தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் 75 சதவீதமாக இருந்த தனது பங்கை 60 சதவீதமாகக் குறைத்ததால், ஆண்டு ஒன்றிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

அதே போன்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் கடனான 22ஆயிரத்து 815 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு தனது கடனாக ஏற்றுக்கொண்டதன் விளைவாக, தமிழ்நாடு அரசின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023, கீழ் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 217 திட்டங்கள் செயல்படுத்துவதற்காக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் 190 திட்டங்கள் மாநில அரசு, அதன் முகவரமைப்புகளின் மூலமாகவும், தனியார் துறை பங்களிப்புடனும் செயல்படுத்தி வருவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.