பழங்குடியினர் மோதல் – 24 பேர் உயிரிழப்பு

264

பசிபிக் பெருங்கடல் தீவு நாடு பப்புவா நியூகினியா. அங்கு மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலை நிறுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது.

இந்த நிலையில் அங்கு இரு பழங்குடி இன மக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். 3 நாட்களாக நடந்து வந்த இந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் 2 கர்ப்பிணி பெண்களும் அடங்குவர். இந்த மோதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டிப்பாக நீதி வழங்கப்படும் என பிரதமர் ஜேம்ஸ் மாரபி உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of