அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’- முதல்வர் கடிதம்

450

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், மூன்று தினங்களுக்குப் பின் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து, அவரது வீரத்தை பாராட்டும் விதமாக, விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும், நேரடியாக சென்றும் வரவேற்றனர்.

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா விருது’ வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் பிடியிலிருந்து மீண்டு வந்த விங் கமாண்டர் வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of