உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க… கண்ணீருடன் கூறும் பரவை முனியம்மா!

1550

மதுரை மாவட்டம் பரவை பகுதியை சேர்ந்தவர் பரவை முனியம்மா. சிறு வயதில் இருந்தே அந்த பகுதியில் நாட்டுப்புற பாடலை பாடி வந்தார் அவரது திறமைக்கு மிகவும் தாமதமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.முதல் வாய்ப்பு சியான் விக்ரமுடன் தூள் படத்தில் சிங்கம் போலே பறந்து வரும் செல்ல பேராண்டி என்ற பாடலை பாடி நடித்துள்ளார். இப்பாடல் மிகவும் பிரபலமானது. முனியாம்மாவின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் வயது முதிர்வின் காரணமாக தீடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டர்.இதனால் பட வாய்ப்புகள் குறைந்து வறுமையில் இருந்தார்.பரவை முனியாம்மா. அப்போது அதனை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைப்புத்தொகையாக 6 லட்சம் ரூபாயை பரவை முனியாம்மளுக்கு வழங்கினார். இந்த பணம் மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாயாக அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பரவை முனியாம்மா ஒரு விஷயத்தை கண்ணீருடன் கூறினார்.. அதாவது நான் இறந்த பிறகு தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு வழங்க வேண்டும் என கூறினார்.இதை கேட்ட அப்பகுதி மக்களை கண் கலங்க வைத்துள்ளது. திறைமயான பாட்டியை இந்நிலையில் பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of