“சிங்கம் போலே நடந்துவரான் என் செல்லபேராண்டி” புகழ் பரவை முனியம்மா காலமானார்..!

208

பிரபல மக்கள் இசைக் கலைஞரும், பல திரைப்படங்களில் நடித்தவருமான பரவை முனியம்மா கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், இன்று காலை மரணமடைந்த தகவல் கேட்டு திரையுலகினரும், நாட்டுப்புறக் கலைஞர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்தவர் முனியம்மா, சிறு வயது முதலே தன்னுடைய கணீர்ர்க்குரலால் மேடைகளில் நாட்டுப்புறப் பாடல்களையும், நாட்டார் தெய்வங்களையும் பாடி புகழ்பெற்றார். அப்பாடல்கள் இசை தொகுப்புகளாக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனையடுத்து சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

இந்த நிலையில் கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பரவை முனியம்மா இன்று காலமானார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of