பூஜை என்ற பெயரில்.. தந்தையே மகள்களுக்கு செய்த கொடுமை..

922

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதியினர். இவர்கள் இருவரும் நன்கு படித்து கல்லூரிகளில் உயர்ந்த பதவியில் உள்ளனர்.

இவர்களுக்கு அலேக்யா, சாய் திவ்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். பெருந்தொற்று காரனமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே பெற்றோருடன் தங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு 2 மகள்களை நிர்வாணப்படுத்தி பூஜை என்ற பெயரில் உடற்பயிற்சி செய்யும் Dumbells மூலம் அடித்து கொலை செய்துள்ளனர். சம்பவம் அறிந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினரை பெற்றோர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இறந்த மகள்கள் இன்று இரவுக்குள் திரும்ப வருவார்கள் என பெற்றோர்கள் உளறியதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், உடல்களை மீட்டனர். பெற்றோர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement