செருப்பை தைத்து காப்பாற்றிய பெற்றோர்..! பிள்ளைகள் செய்த கொடுமை..! கண்கலங்க வைத்த தம்பதி..!

455

உலகில் அசுத்தம் அடையாத பொருள் என்று நெருப்பை சொல்வார்கள். அதிலும், கலங்கம் இருக்கலாம், ஆனால் தாய், தந்தையின் அன்பில் கலங்கம் இருக்காது என்று கவிஞர்கள் பல ஆண்டுகளாக பாடி வருகின்றனர்.

தன் வயிற்றை காய வைத்து, தன் பிள்ளைகளின் வயிற்றை நிரப்பும் பெற்றோர்கள் இன்னும் இங்கு இருந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். என்ன தான் பிள்ளைகளை பெற்றோர், தன்னுயிர் போல் பார்த்துக்கொண்டாளும், இன்னமும் பல முதியோர் இல்லங்கள் இயங்கிக்கொண்டு தான் உள்ளது.

ஒரு சில பிள்ளைகளாவது, தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். ஆனால், ஒரு சிலர் அவர்களை தன்னந்தனியே தவிக்கவிட்டு சென்றுவிடுகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் கணேசன் மற்றும் சரசு.

செருப்பு தைக்கும் தொழில் செய்யும் இவர்களுக்கு, ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். மிகவும் கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து, ஆளாக்கினர். திடீரென இவர்களது பிள்ளைகள் இருவரும், திருமணம் செய்துக்கொண்டு, தங்களது பெற்றோரை தவிக்கவிட்டுவிட்டு, தனியே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது கூட அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்காமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், தங்களது பிள்ளைகளை கடைசியாக ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று இருவரும் தொடர்ந்து தேடி வருகின்றனர். செல்லும் இடங்களில் செருப்பை தைத்தும், குடை ரிப்பேர் செய்தும் தங்களது வயிற்றுப் பசியை போக்கி வந்தனர்.

அடை மழையிலும், கடுங்குளிரிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் அழுக்குத் துணியோடு அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் இந்த வயோதிக தம்பதி வாழ்க்கையை கழிக்கின்றனர். வாழ்க்கை என்பது ஒரு எதிரொலியை போல, அது நம் செய்வதை திரும்பி நமக்கே செய்யும் என்பதை தனியே தவிக்கவிட்ட பிள்ளைகளுக்கு தெரியவில்லை என்பது கசப்பான உண்மை.