சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு

455

புதுச்சேரி அரசின் 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் இந்தியத் திரைப்பட விழா வரும் 13ஆம் தேதி தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.

திரைப்பட விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்காக, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு விருது வழங்க உள்ளார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.