“சின்னபொண்ணு ரொம்ப Strict-ப்பா..” ரயில் படிக்கட்டில் பயணம்..! துரத்திக்கொண்டே எச்சரிக்ககை..!

351

கடந்த சில ஆண்டுகளாக பூங்கா ரயில் நிலையத்தில் சுற்றி வரும் சின்னப்பொண்ணு என்ற நாய், யாருக்கும் எந்த தொந்தரவு தருவதில்லை என்று ரயில் நிலைய நடைமேடை கடை வியபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில் நிலையத்தில் படுத்து கொண்டிருக்கும் இந்த நாய், ரயில் வந்து புறப்பட தயாரானதும் தனது பணியை தொடங்குகிறது.

அதாவது ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்பவர்களை குரைத்தபடி துரத்தி செல்லும் சின்னப்பொண்ணு, அவர்கள் உள்ளே செல்லும் வரை விடுவதில்லை.

மேலும் தண்டவாளத்தைக் கடப்பவர்களையும் இந்த ஸ்ட்ரிட்டான சின்னப்பொண்ணு குரைத்து எச்சரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் அறிவு திறனை பார்த்து வியந்த ரயில்வே போலீசார், சின்னபொண்ணுவை இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கும் அழைத்து செல்கின்றனர்.