3 வது கட்ட மக்களவை தேர்தல்.., 116 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு

216

அனல் பறக்கும் பாராளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக கடந்த 11 ஆம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2 வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு கடந்த 18 ஆம் தேதி நடந்தது.

இதனைத்தொடர்ந்து, 3 வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

இதில் 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றனர். அதன் விபரங்கள் பின் வருமாறு,

அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கர் (7), குஜராத் (26), கோவா (2), ஜம்முகாஷ்மீர் (1), கர்நாடகா (14), கேரளா (20), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்குவங்காளம் (5), தத்ரா நகர் கவேலி (1), டாமன் டையூ (1).

இந்த 116 தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் நாளை ஓட்டுப்பதிவை ராகுல் காந்தி சந்திக்கிறார்.

இதே போல பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்று முதல் முறையாக மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் களம் காண்கிறார். இந்த தொகுதி மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கானது. அவரை ஒரங்கட்டிவிட்டு அமித்ஷா தற்போது போட்டியிடுகிறார். குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேபோல சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனகார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of