அனல் பறக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் 4 மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது

415

நாடு முழுவதும் நடக்க நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்ற ஆந்திரா பிரதேசம், அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் மிகவும் மிக்கியமானது நடக்க இருக்கின்ற இடைத்தேர்தல் தான் இதனைப்பொருத்து தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்கின்றதா என்பது தெரியும்.

இதனால் அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில், இன்று முதற் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இன்று நடக்கின்றது.

இன்று தேர்தல் நடக்கும் மாநிலங்கும், எத்தனை தொகுதிகளும்

ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

91 தொகுதிகளுக்கு ஆயிரத்து 295 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்திய அரசியல் சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் மக்கள் தெரிவிக்கத்தொடங்கி விட்டனர் இதற்கான விடையை மே அனைவருக்கும் தெரிய வரும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of