தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி!

203

தமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் அதிகாரி இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“தேர்தலை நியமாக நடத்த உறுதிசெய்வதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். மக்களவை தேர்தலுக்கு தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அணைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடு, விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மே 18 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்”

இவ்வாறு அவர் கூறினார்.