நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

119

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது, கூட்டணி கட்சிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கமல், சீமான் ஆகியோர் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்டுவதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன் படி இன்று, தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில்,

“தேர்தலை நியமாக நடத்த உறுதிசெய்வதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். மக்களவை தேர்தலுக்கு தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடு, விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தோடு 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

18 முதல் 19 வயது வரை 1.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு முறை அணைத்து வாக்குச்சாவடிகளிலும், பயன்படுத்தப்படும்.

2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 8 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். வாக்காளர்கள் 1950 என்ற எல்ப் லைன் எண் மூலம் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மின்னனு வாக்கு எந்திரங்களில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் உடணடியாக அமுலுக்கு வர உள்ளன. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

மக்களவை தேர்தலுக்கு சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகள். சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கான செலவும், வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் நடைபெறும்.”

இவ்வாறு  அவர் கூறினார்.