முலாயம்சிங்குக்கு ஆதரவாக மாயாவதி தேர்தல் பிரசாரம்

419

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நிரந்தர பகையாளிகளாக இருந்து வந்தன. இதற்கு முந்தைய பல சட்டசபை தேர்தல்களிலும் இந்த இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

இதனால் கடந்த சட்டசபை தேர்தலிலும் இவர்கள் படுதோல்வியை சந்தித்தனர், அங்கு பாஜக அமோக வெற்றியை பெற்று ஆட்சியை தன்வசமாக்கினர்.

ஆனால் இப்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு சமாஜ்வாடி கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார். இதுவரை சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங்கை கடுமையாக விமர்சித்து வந்த மாயாவதி இப்போது அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மைன்புரி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரை ஆதரித்து மாயவதி வருகிற 19-ந்தேதி மைன்புரியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதில் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றார்கள். 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி முலாயம்சிங்குக்காக ஓட்டு கேட்கும் நிலை உருவாகி உள்ளது. அவர் என்ன பேசப்போகிறார் என்பதை உத்தரபிரதேச மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாடி கூட்டணி அமைத்ததை முலாயம்சிங் விரும்பவில்லை. இரு கட்சிகளும் தொகுதிகளை பிரித்து கொண்டபோது, சமாஜ்வாடி கட்சியை விட பகுஜன் சமாஜ் கூடுதலாக ஒரு தொகுதியை பெற்றது. இது முலாயம்சிங்குக்கு அதிருப்தியை எற்படுத்தி இருந்தது. அதுபற்றி எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் தான் முலாயம்சிங்குக்காக மாயாவதி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், முலாயம்சிங்குக்கு கட்சி தொண்டர்கள் உரிய கவுரவம் அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of