அதிரடியாக தமிழகத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி?

422

நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ளயுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.இம்மனுவானது மார்ச் 15, 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே விருப்பமனு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இதில், கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் விருப்பமனு வாங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of