கூட்டணி இருந்தாலும் இவரை எதிர்த்து போட்டி இடுவேன்..,

390

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த மந்திரி அர்ஜூன் கோட்கர் தான் பா.ஜனதா கட்சி, எம்.பி. ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து ஜல்னா தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். கூட்டணி அமைந்தாலும் தான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார்.

மேலும், ஜல்னாவில் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே கலந்துகொண்டு பேசிகையில்,

“பா.ஜனதா எம்.பி. ராவ்சாகேப் தன்வேயை எதிர்த்து போட்டியிடும் தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும், இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பேசி இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of