நாடாளுமன்றத்தில் மதரீதியான முழக்கம்! எச்சரிக்கை கொடுத்த சபாநாயகர்!

979

17 -வது மக்களவையின் உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக்கொண்டனர். அப்போது தமிழக எம்.பி-க்கள், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கு பாஜக-வினர், ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே போன்ற எதிர் முழக்கங்களை எழுப்பினர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள், ஜெய் காளி போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சௌத்திரி, “பல கட்சிகள் கொண்ட ஜனநாயகத்தில், இதுபோன்ற முழக்கங்கள் நல்லதல்ல” என்று பேசினார்.

இவரது கருத்தை வரவேற்ற சபாநாயகர் ஓம் பிர்லா,

“இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இந்தக் கோயில், நாடாளுமன்ற விதிகளின்படி செயல்படும். இந்த இடத்தின் நன்மதிப்பை உணர்ந்து செயல்பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது.

உலகம் நம்மை கவனிக்கிறது. நமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாடாளுமன்றம், மத ரீதியான முழக்கங்களை முன்வைக்கும் இடம் கிடையாது. பதாகைகளை ஏந்தும் இடம் கிடையாது. அதற்கான இடங்கள் பல இருக்கின்றன.

உறுப்பினர் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லலாம். என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அது இங்கு விவாதிக்கப்படும். அரசின் திட்டங்களை விமர்சிக்கலாம். ஆனால், இங்கு வந்து மத ரீதியான முழக்கங்கள் செய்ய வேண்டாம். அனைத்துக் கட்சிகளும் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையைக் காப்பதே எனது கடமை.

இங்கு இருக்கும் அனைவருக்கு அவர்களின் கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. இந்த அரசு, தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் அரசாங்கமும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்வது மிக அவசியம். எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்சொல்வது அவர்களின் கடமை.

நான் கண்டிப்புடன் அவையை நடத்த விரும்பவில்லை. அனைவரும் தங்களின் மனத்தில் இருப்பதை இங்கு பேசலாம். ஆனால், விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Martin. P Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Martin. P
Guest
Martin. P

மாநில மொழிகளில் கற்பிக்கவும் கற்கவும் இலகுவான வசதி வாய்ப்புகள் இருக்கும்போது கடினமான மொழிகளை கற்பிக்கவும் கற்கவும் கட்டாயப்படுத்த முற்படுவது பிரச்சினைகளை உருவாக்கும். கடினமான மொழிகளை கற்கவும் கற்பிக்கவும் ஒருவர் விருப்பப்பட்டால் அவரை தடுக்க முற்படுவதும் பிரச்சினைகளை உருவாக்கும்.