திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பப் படிவம்

664

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ஆம் தேதி முதல் விண்ணப்பப் படிவம் பெறலாம் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. பாஜக, பாமகவுடன் தொகுதி பங்கீட்டை முடித்து கொண்ட அதிமுக, அடுத்ததாக தேமுதிக, தமாகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேப்போல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திமுக முடித்துள்ளது.

மேலும் அடுத்தப்படியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, வரும் 25-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில், விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

பூர்த்தி செய்த விண்ணத்தை மார்ச் 7-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் 25 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இதேப்போல் 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர்கள் மார்ச் ஒன்றாம் தேதி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அன்பழகன் அறிவித்துள்ளார்.

Advertisement