ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

417

ரஃபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் வார்த்தை போர் நீடிக்கிறது. இந்நிலையில் ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் பொய்சொல்வதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஆதரிக்க இயலாதவற்றை ஆதரிப்பதற்காக, போலியான நேர்மையுடன் பொய்களை அள்ளி வீசுவதுதான் அருண் ஜெட்லியின் சிறப்பும், திறமையும் என கூறியுள்ளார்.

பிரதமரும், நிதி அமைச்சரும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, ‘ரஃபேல்’ விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of