மகளின் தோழியிடமா..? தந்தை பகீர் செயல்..!

683

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். பரோட்டா மாஸ்டராக பணிபுரியும் இவருக்கு, மனைவியும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகளும், அவர் வீட்டின் அருகே வசித்த வந்த தேவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பெண்ணும் நண்பர்களாவர்.

இதனால் தேவி அடிக்கடி நடராஜன் வீட்டிற்கு வந்துள்ளார். இவரைப் பார்த்து மோகம் அடைந்த நடராஜன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சீரழித்துள்ளார். பின்னர் அடிக்கடி யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை மிரட்டி உல்லாசம் அனுபவித்துள்ளார் நடராஜன்.

இதனைத்தொடர்ந்து கர்ப்பம் ஆனார். இதனையறிந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடராஜனை கைது செய்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.