யாருடைய கிளி? – காவலர்களை கலங்கடித்த ”கிளி”யின் வழக்கு

503

ராஜ்வீர் என்பவர் கிளி ஒன்று வளர்த்து வந்தார். கடந்த ஒர் ஆண்டுக்கு முன்னர் தான் வளர்த்துவந்த கிளி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து கிளியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்செயலாக தனது தோழன் முஸ்கான் வீட்டிற்கு சென்ற ராஜ்வீருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

என்னவென்றால் அவர் செல்லமாக வளர்த்து வந்த கிளி அவரது தோழர் வீட்டில் இருந்தது.

தனது முன்னாள் எஜமானரை கண்ட கிளி ராஜ்வீரின் பெயரை சொல்லி அழைத்துள்ளது. இதனை பார்த்து மனம் உருகிய கிளியின் எஜமானர் தனது கிளியை திரும்ப அளிக்கும் படி தோழனிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், தன்னிடம் தஞ்சமடைந்துள்ள கிளி தனக்குத்தான் சொந்தம் என முஸ்கான் மறுத்துவிட்டார்.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் இந்த சண்டை காவல்நிலையத்தை அடைந்தது. இரு குடும்பத்தினரயும் சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தினா காவலர்கள்.

ஆனால், பலனேதும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜ்வீர் மற்றும் முஸ்கான் குடும்பத்தினர் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வரும் வரை கிளி காவல்நிலையத்திலே இருக்கட்டும் எனக் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of