“அயோக்கியா” த்த்தனம்! “என் கதைய திருடிடானுங்க!” பார்த்திபன் டுவீட்!

1518

புதுமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால், பார்த்திபன், ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அயோக்யா. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், விமர்சகர்களும் நல்ல விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது பின்வருமாறு:-

“அயோக்கியா’த்த்தனம்! 94-ல் வெளியான என் ginal ginal original ‘உள்ளே வெளியே’

படத்தை ஐ in&out-ல வுட்டி temper (rights பெறாமல்) தெலுங்கில் ஷிட் ஆக்கி

தமிழிலும் தற்போது! அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு’அ-தனம்’? குற்ற

உணர்ச்சி இல்லாமல் எப்படி? வழக்கு செய்யாமல், பெருமையுடன் பதிவிடுகிறேன்”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

விஷாலுக்கும், பார்த்திபனுக்கும் இடையே சண்டை நிலவுவதாக கிசுகிசுக்கப்படும் நிலையில், பார்த்திபன் இவ்வாறு பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவர் கோபமாக இப்படி பதிவிட்டாரா அல்லது நகைச்சுவையாக இப்படி பதிவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

Advertisement