ஓட்டை போடாதீர்கள்! ஓட்டை போடாதீர்கள்! பார்த்திபன் போட்ட டுவீட்

845

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீத மக்கள் வாக்கு செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில்,

”ஓட்டைப் போடாதீர்கள்

ஓட்டைப் போடாதீர்கள்

வல்லரசாகப் போகும்

இந்தியாவின் கூகுள்

வரைபடத்தில்

ஓட்டைப் போடாதீர்கள்

தேர்தல் வந்துடுச்சி

துட்டுக்கு ஓட்டைப்போட்டு

நம் பிள்ளைகளின்

ஆரோக்கிய வாழ்வில்

ஓட்டைப் போடாதீர்கள்

இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

சொல் விளையாட்டில் இவர் இவ்வாறு பதிவு செய்திருப்பது பலரையும் ரசிக்க வைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement