கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கு போக்குவரத்து சலுகை.., தலைமை தேர்தல் அதிகாரி

525

தமிழகத்தில் மொத்தம் காலியாக உள்ள சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்கள் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பவை,

“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின் படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், அந்த கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் செலவுக்கணக்கில் சேராது.

இந்த சலுகையைப் பெற, பிரசாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அல்லது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவேண்டும்.

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டுள்ள நாளில் இருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கை 22 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

செலவுத்தொகையில் இருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அல்லது தலைமை தேர்தல் அதிகாரிக்கு 29 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.

இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால் அதில் விலக்கு கோர இயலாது” என தெரிவித்திருந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of