முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்

275

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சியின் மேலிடம் முடிவு எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ளமுடியாது என்றும் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

சென்னை பாரிமுனை பகுதியில் வைரஸ் தொற்று தடுப்புப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு முகக்கவசம், உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், அதிமுக-வின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சியின் மேலிடம் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.

தற்போது அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து கட்சியின் கருத்து அல்ல என்றும் அவர் மறுப்பு தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து இப்போது கருத்துகளை கூறுவது அதிமுக-வை பலவீனப்படுத்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Advertisement