“வெடிகுண்டு” என்றவுடன் கைதான பயணி . .

161
cochin-7.3.19

புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்திய – பாக் எல்லைப்பகுதியில் மிகுந்த பதட்ட நிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள அணைத்து விமான நிலையங்களும் உஷார் நிலையில் உள்ளது, பயணிகள் பல அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று கொச்சி விமானநிலையத்தில் கேரளா, பத்தனம்திட்டா என்ற பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மாத்தியூ என்பவர் கொச்சி முதல் புவனேஸ்வர் வரை செல்லவிருந்த ஒரு தனியார் விமானசேவை நிறுவனத்தில் முன் பதிவு செய்திருந்தார். நீண்ட நேரம், பல அடுக்கு சோதனைகள் நடந்ததால் ஆத்திரமடைந்த அவர் அங்கிருந்த விமான ஊழியரிடம் “என் பையில் என்ன வெடிகுண்டா இருக்கிறது ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெடிகுண்டு உள்ளதா என்று அவர் கேட்டதும் விமானநிலைய ஊழியர்கள் அச்சமடைந்தனர் உடனடியாக மோப்பநாய், மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை அங்கு வரவழைத்தனர், அந்த பயணியை சோதனை செய்து ஏதும் அவரிடம் இல்லை என்று உறுதி செய்த பிறகு அவர் அங்குள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சில மணிநேரம் பதட்டமான சூழல் நிலவியது.