பயணிகள் ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதை கண்டித்து திருப்பூரில் பயணிகள் மறியல் போராட்டம்

573

பயணிகள் ரயில் தொடர்ந்து தாமதமாக வருவதை கண்டித்து திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூரிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் நாள்தோறும் ரயில் மூலம் கோவைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவிலிருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் பயணிகள் ரயில் கடந்த சில நாட்களாக தாமதமாக வருவது தொடர்கதையாக உள்ளது.

இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வழக்கமாக இரவு 7.20 மணிக்கு வரவேண்டிய இந்த ரயில் நேற்று 9 மணி வரை வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ரயில் பயணிகள், விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே சென்னை செல்வதற்க்காக ரயில் நிலையம் வந்த கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

Advertisement