லஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி

174

TNPSC கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் TNPSC நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த தேர்வில் தவறுகள் நடந்திருப்பது உறுதியானது. அதன்படி, 99 தேர்வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை TNPSC கண்டுபிடித்தது.

அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து TNPSC செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில், CBCID போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வர்கள் ஏழரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இருவரை CBCID போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of