வைரஸ் தொற்று உறுதி.. ஆம்புலன்சில் சென்ற பெண் திடீரென மாயம்.. இறுதியில் டுவிஸ்ட்..

860

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் காவியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவர், தனது வீட்டிற்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் கடந்த 3 ஆம் தேதி அன்று வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்த நாள் வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் கட்ட பாதிப்பில் இருப்பதால் மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், செல்போன் எடுத்துக்கொண்டு வரக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆம்புலன்சில் ஏறிய அந்த பெண், கடந்த 2 வாரங்களாக காணவில்லை. மருத்துவமனையில் விசாரணை நடத்தியதில், அப்படியொரு நோயாளி அனுமதிக்கப்படவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால் பதறிய குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக, அந்த பெண்ணே வெளியே எங்கேயாவது தப்பித்து போயிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு இருக்க, செப்டம்பர் 8 ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து அனுஷா போலீசாரிடமும் பேசியுள்ளார். ஆனாலும் அவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.